அஜித்தை தொடர்ந்து விக்ரம் ஏற்ற சர்ச்சையான கதாபாத்திரம்

337

 

விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் எடுக்க துணிந்தவர். அந்த வகையில் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

ஆனால், 10 எண்றதுக்குள்ள படத்தின் மூலம் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பினார். இதனால், அடுத்து எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.

இந்நிலையில் இவர் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், ஒரு கதாபாத்திரத்தில் பெண் தன்மை கொண்டவராக நடிக்கின்றாராம்.

வரலாறு படத்தில் அஜித் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பலராலும் இந்த கதாபாத்திரம் குறித்து சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால், படத்தின் ரிசல்ட் அனைவரின் பேச்சையும் ஓரங்கட்டியது. அதேபோல் விக்ரமும் வெற்றிபெறுவார் என எதிர்ப்பார்ப்போம்.

SHARE