தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் நேற்றுமுன்தினம் சிறப்பாக கொண்டாடினர்.
நலத்திட்ட உதவிகள் செய்தும், சமூக வலைத்தளங்களிலும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் ரசிகர் ஒருவர் பிறந்தநாள் பரிசாக ஒரு டீசரை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அஜித் சோழ மன்னனாக நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டதைத் தொடர்ந்து அவர் அதில் அஜித் ராஜ ராஜ சோழனாக நடிப்பது போல் டீசரை உருவாக்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.