அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்திருந்தவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது ஹிந்தியில் பிங்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவரிடம் அஜித் பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு டாப்ஸி, அஜித் நல்லா பழக கூடியவர். நம் மீது நல்ல விமர்சனங்களை அப்படியே ஏற்றுகொள்ள கூடாது, நம்மை பிடித்தவர்கள் அதை மிகைபடுத்தி கூட கூறலாம். ஆனால், எதிர்மறை விமர்சனம் எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதுதான் அஜித் எனக்கு சொல்லி கொடுத்த மந்திரம் என கூறியுள்ளார்.