அஜித் தன் சினிமா பயணத்தில் தவறவிட்ட 8 பிரம்மாண்ட படங்கள்

238

img_6400_1709143g

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடும் ஒரு நடிகர். ஆனால் இவர் அதையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார். இதுவே ரசிகர்கள் அவரை கொண்டாடும் மிகப்பெரிய ப்ளஸ் என்று சொல்லலாம்.

தற்போது இவர் தன் சினிமா பயணத்தில் தவறவிட்ட 8 ஹிட் படங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தற்போது பார்ப்போம்.

கோ (2011)

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. சூர்யா, சிம்பு இந்த படத்தில் நடிக்க மறுத்த பிறகே ஜீவா நடித்தார் என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் முதலில் இந்த படத்தில் நடிக்க தல அஜித்திற்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம்.

நான் கடவுள் (2009)தேசிய விருது கிடைத்த இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஆர்யா சினிமா பயணமே உயர்ந்தது என்று சொல்லலாம். ஆனால் பாலா அஜித்தை தான் இந்த படத்தில் முதலில் நடிக்க வைக்க விரும்பினாராம்.

கஜினி (2005)

மிரட்டல் என்று பெயரிடப்பட்டு அஜித், அசினுடன் Photoshoot எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் ஏதோ சில காரணத்தால் படம் கஜினி என்று பெயரிடப்பட்டு சூர்யா நடித்திருந்தார். இப்படத்திற்காக சூர்யாவிற்கு Tamil Nadu State Film விருது கிடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காக்க காக்க (2003)

அஜித்திற்கு கிடைத்த வாய்ப்பு சூர்யாவிற்கு சென்றிருக்கிறது. இதில் சூர்யா, ஜோதிகாவின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டதோடு, பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

சாமி (2003)

ஆறுசாமி என்ற கதாபாத்திரத்தில் ஒரு உண்மையான தமிழ்நாடு போலிஸை நம் கண்முன் கொண்டு வந்தார் விக்ரம். இந்த படத்தில் நடிக்க முதலில் ஹரி, அஜித்திடம் கேட்ட போது நடிக்க மறுத்திருக்கிறார். பின் அந்த வாய்ப்பு விக்ரமிடம் சென்றிருக்கிறது.

ரன் (2002)

லிங்குசாமி இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் என்பதால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கூட ரீமேக் செய்யப்பட்டது. மாதவனின் முதல் ஆக்ஷன் படம் இதுதான். ஆனால் இந்த படத்தில் நடிக்க வந்த முதல் வாய்ப்பே அஜித்திற்கு தான்.

ஜெமினி (2002)

advertisement

2002ல் ஓ போடு என எல்லோரையும் பைத்தியமாக சொல்ல வைத்தார் விக்ரம். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களே படத்திற்கு ப்ளஸ் என்று கூறலாம். விக்ரம் நடித்திருந்தாலும் முதல் வாய்ப்பு அஜித்திற்கு தான் வந்திருக்கிறது. ஏறுமுகம் என்ற பெயரில் அஜித் நடிப்பதாக இருந்தது.

நந்தா (2001)

நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகமானாலும் நந்தா படம் தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த மிகப் பெரிய வெற்றி படம். ஆனால் சூர்யா கலக்கி இருந்த இந்த படத்தில் நடிக்க அஜித்திற்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

SHARE