
அஜித், எச்.வினோத்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணி இணைந்து படம் எடுக்கவுள்ளனர். இதன் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறியுள்ளார் எச்.வினோத். கதை அருமையாக இருக்கிறது. எனது முந்தைய 2 படங்களுமே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
