பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மே 30, 6:16 PM IST


கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது9அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பின்னி மில்லில் தொடங்கியது. பின்னர் நாவலுர், பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர். இதில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். இதன் புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானது.
இப்படத்தில் அஜித் டாக்சி டிரைவராக நடிப்பதாகவும், பாட்ஷா படத்தின் ரீமேக் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால், அஜித் டாக்சி டிரைவர் இல்லை என்றும், சுருதிஹாசன்தான் டாக்சி டிரைவராக நடிக்கிறார் என்றும் தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் அஜித், சுருதி ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.