தமிழ் சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே உச்சத்தை தொட்டவர் அனிருத். இவர் இசையமைத்த பாடல்கள் மட்டுமின்றி படங்களும் சூப்பர் ஹிட் தான்.
ஆனால், இவர் சிக்கிய பீப் சாங் சர்ச்சையால் கிட்டத்தட்ட இன்னும் இவர் இந்தியாவிற்கே சரியாக திரும்பவில்லையாம்.
துபாய், சிங்கப்பூர், மலேசியா என்று வெளிநாடுகளிலேயே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் சென்னையில் இருந்த தன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கூட ஹைதராபாத்தில் மாற்றியதாக ஒரு செய்தி உலா வருகின்றது. இவருக்கு அடுத்து அஜித் படம் மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது.