விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். பிறகு இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இவர் நடிகர் அஜித்தின் வேதாளம் பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.