சமூக வலைத்தளத்தையே நேற்று ஒரு செய்தி பரபரப்புக்குள்ளாக்கியது. அது வேறு ஒன்றும் இல்லை இயக்குனர் முருகதாஸ் தன் டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில்அஜித் புகைப்படத்தை வைத்தார்.
இதை தொடர்ந்து இருவரும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் முருகதாஸ் தரப்பிலிருந்து ‘அஜித் மீது இருந்து மரியாதை நிமித்தமாக அந்த புகைப்படத்தை வைத்தேன்.
ஆனால், நானும் அஜித்தின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறேன், அவர் ஓகே சொன்னால் நான் படம் இயக்க ரெடி’ என அவர் கூறியதாக கூறப்படுகின்றது.