தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் அஜித். இவரை புகழாத மக்களே கிடையாது.
தற்போது உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படம் குறித்தும், அஜித்தை பற்றியும் இயக்குனர் ஸ்ரீநாத் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
டெய்சி என்ற பெயரில் இப்படம் உருவாகும் போது நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம். ஆனால் ஆரா சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ் கூறியபடி படத்தில் அடிக்கடி இடம்பெரும் உனக்கென்ன வேணும் சொல்லு என்பதையே படத்தின் டைட்டிலாக வைத்தோம்.
இப்பெயர் மாற்றிய பிறகு படத்திற்கு ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கிவிட்டது. படமும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி ரிலீசாக போகிறது என்றார்.