அஜித் தனக்கென்று உலகம் முழுவதும் பல லட்சம் தமிழ் மக்களை ரசிகர்களாக கொண்டவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருக்க, தீபாவளிக்கு படம் வரவில்லை என்ற செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்ததை ஏற்படுத்தியிருக்கும்.
இதை தொடர்ந்து படம் பொங்கலுக்கு வரும் என்று கூறியுள்ள நிலையில், அதேநாள் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தை கொண்டு வரும் வேலையும் நடந்து வருகின்றதாம்.
இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக விஸ்வாசம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புக்கள் அதிகம், இதனால், அஜித் ரசிகர்கள் பொங்கலுக்கு சொன்னது போல் வருமா? என்று ஏக்கத்துடன் உள்ளனர்.