அஜித் ரசிகர்கள் எல்லாரையும் பெருமைப்பட செய்த யோகிபாபு!

177

நடிகர் அஜித்திற்கு சினிமா பிரபலங்களிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவரான யோகி பாபு தனது அடுத்த படமான சிலுக்குவார்பட்டி சிங்கத்தில் அஜித்தை கவுரவிக்கும் விதமாக செயல் ஒன்றை செய்துள்ளார்.

இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ ஒன்று நேற்று வெளியானது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போஸ் கொடுத்திருந்தனர். படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு வீரம் படத்தில் அஜித் டீ கிளாஸுடன் அமர்ந்திருப்பதை போன்று போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

மேலும் அவரது பின்புறம் வீரம் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போட்டோ தான் தற்சமயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

SHARE