தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இயக்குனர் கே .வி ஆனந்த இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, அதே நேரத்தில் ‘ரெக்க’ படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்து வாரம் கே .வி ஆனந்த இயக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதிக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. மருத்துவர்கள் விஜய் சேதுபதியை சிறிது நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினார்.
ஆனால் அடுத்த நாளே ‘ரெக்க’ படப்பிடிப்பு இருந்ததால் என்னால் படப்பிடிப்பு பாதிக்க கூடாது, என்று அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த சம்பவம் வேதாளத்தில் அஜித்துக்கு நடந்தது போலே அமைந்தது . என்னால் படப்பிடிப்பு தள்ளிப்போக கூடாது என்று வலி பொறுத்து கொண்டு அஜித் நடித்தது நினைவுப்படுகிறது.