அஜித் வாங்கும் சம்பளம் 170 கோடி கிடையாது.. வெளிவந்த உண்மை, இதுதான்

82

 

விடாமுயற்சி படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என கூறப்படுகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

அஜித் 63
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது. அஜித்தின் ரசிகரும் பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் 63வது படத்தை இயக்கவுள்ளாராம். மேலும் இப்பாடத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

சம்பளம்
இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 170 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இப்படத்தில் நடக்க ரூ. 163 கோடி தான் அஜித் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

ஏறக்குறைய இது உறுதியான தகவல் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE