அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்

226

அனிருத் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இதை அவர் வெளிப்படையாகவே சில பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அனிருத் ஒரு பேட்டியில் அஜித்திடம் வந்த பாராட்டு குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘அஜித் சார் ரசிகன் என்பதால் அவருக்கு காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.

அதனால் தான் ஆலுமா டோலுமா அப்படி ஒரு பாடலாக அமைந்தது, என் திரைப்பயணத்தில் கொலைவெறி பாடலுக்கு பிறகு ஆலுமா டோலுமா தான் செம்ம ஹிட் அடித்தது.

அஜித் சார் எப்போதும் ஊக்கப்படுத்தும் விதமாக தான் பேசுவார், அவருக்கு என்னுடைய வணக்கம் சென்னை ஆல்பம் தான் மிகவும் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

SHARE