அஜீரணம் வயிறு உப்புசம் உடனடியாக நீங்க அற்புதமான டிப்ஸ் இதோ

208

நேரத்துக்கு சாப்பிடாமல் போதுமான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அஜீரணம், வயிறு உப்புசம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கியவர்களுக்கான மருந்து இதோ,

தேவையான பொருட்கள்

  • இஞ்சி – 1/4 கிலோ
  • சுக்கு – 10 கிராம்
  • மிளகு – 10 கிராம்
  • திப்பிலி – 10 கிராம்
செய்முறை

முதலில் 1/4 கிலோ இஞ்சியை தோல் நீக்கி உலர்த்தி, தூளாக்கி, சிறிது நெய்விட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவு பொடியாக்கி, அதை சுடுநீரில் கலந்து காலை மற்றும் இரவில் உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வந்தால், வயிறு உப்புசம், அஜீரண கோளாறு பிரச்சனைகள் நீங்கிவிடும்.

குறிப்பு

குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த கலவையுடன் தேன் கலந்து கொடுக்கலாம்.

SHARE