(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
அட்டன் அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகஸ்தர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 வருடங்களாக நீடித்து வரும் அஞ்சல் சேவையின் தரம் 11 நியமனம் உடனடியாக உறுதி செய்தல், அஞ்சல் சேவை பிரச்சினை தீர்வாக உறுதி, செய்த கெபினட் பத்திரிகை தாமதமின்றி ஒப்புதல் வழங்குதல், சீரற்ற தெழில்நுட்ப சேவையை சீர்செய்து அஞ்சல் சேவை வீழ்ச்சியை தடுத்து நிறுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகஸ்தர்கள் 03.06.2018 நள்ளிரவு 12 மணிமுதல் 05.06.2018 வரை இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலே மலையகம் தழுவிய சகல தபாலக அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகஸ்தர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் அஞ்சல் தொலைத்தொடர்பு பயனாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.