இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லியை முன்னாள் இலங்கை பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் மேதை என்று புகழ்ந்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி வீரரான விராட் கோஹ்லி தற்போது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் விராட் கோஹ்லி பற்றி முன்னாள் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் கூறுகையில், விராட் கோஹ்லி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் டி20 போட்டியில் 30 ஓட்டங்கள் எடுப்பதே சிரமம். ஆனால் அவர் தற்போது அசால்டாக சதங்களை விளாசி வருகிறார். அவர் ஒரு மேதையாக இருக்கிறார்.
அதிக திறமை, தன்னம்பிக்கை, தைரியம் என ஒவ்வொரு நாளும் தன்னை நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும், சச்சினுடன் கோஹ்லியை ஒப்பிட்டு பேசிய வாஸ், இரு சகாப்தங்களின் வீரர்களை ஒப்பிட்டு பேசுவது கடினமானது. சச்சின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர். டெஸ்டில் 15,000 ஓட்டங்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார்.
கோஹ்லி இப்போது தான் ஆட ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அந்த நாட்களில் சச்சின் அபாரமாக ஓட்டங்களை குவித்தார் என்று கூறியுள்ளார்.