அன்றாடம் நாம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் தண்ணீர், பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு இது போன்ற பல்வேறு காரணங்கள் தான் நமது கூந்தலின் வளர்ச்சியை பாதிக்கிறது.
அந்த வகையில் அடர்த்தியான கூந்தலின் வளர்ச்சிக்கு இயற்கையில் ஒருசில பொருட்கள் உள்ளது.
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து அதன் சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து தலைமுடியை கழுவ வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால், ஒரே வாரத்தில் முடி உதிர்வு குறைவதை காணலாம்.
தேங்காய் பால்
ஒரு கப் தேங்காய் பாலுடன் அரை மூடி எலுமிச்சை சாறு தலையில் தடவி, 20 நிமிடம் கழித்து தலைமுடியை தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் விரைவில் முடியின் அடர்த்தியான வளர்ச்சியைக் காணலாம்.
முட்டை
முட்டையை நன்றாக முழுவதும் நுரைக்கும் படி அடித்து அதில் ஆலில் எண்ணெய் மற்றும் தேன் கலந்து க்ரீம் போல செய்து, பின் இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
வெந்தயம் மற்றும் சீரகம்
வெந்தயம் மற்றும் சீரகத்தை ஊற வைத்து அரைத்து, அதனுடன் சிறிதளவு தயிர் கலந்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதேபோல வாரம் இருமுறை செய்தால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை
அரை கப் நெல்லிக்காய் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சி, பின் அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.