அடிக்கடி பசி எடுக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் உஷார்!

161

பெரும்பாலானோர் எந்த நேரமும் உணவின் மீது மட்டுமே கவனத்தை செலுத்தி வருவார்கள். தங்கள் உடம்பிற்கு மீறி உணவை உட்கொண்டு அதனால் நோய் வந்து அவதிப்படுவார்கள்.

நம்மில் பலருக்கும் உணவை பொறுத்தவரையில் பல பிரச்சினை உள்ளது. சிலருக்கு பசியே எடுக்காது, உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். சிலருக்கோ எப்பொழுதும் பசி எடுத்து கொண்டேயிருக்கும். அதிலும் சிலருக்கு சாப்பிட்டு முடித்த உடனேயே பசியுணர்வு ஏற்படும்.

இது பசி போன்ற உணர்வாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.

காலை உணவை தவிர்த்தல்

காலை உணவு என்பது நாம் அன்றைய தினத்தில் நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க கூடியது. எனவே காலை உணவை தவிர்க்க கூடாது.

தண்ணீர் அதிகமாக பருக வேண்டும்

காலையில் எழுந்ததும் உடலில் நீர்சத்துகள் மிகக் குறைவாக இருக்கும்.. பசியுணர்வை ஏற்படுத்த காலையில் தண்ணீர் அருந்த வேண்டும். அதிக உணவு சாப்பிட்ட பின்னும் உங்களுக்கு பசி ஏற்பட்டால் உடனடியாக ஒரு டம்ளர் நீர் குடியுங்கள். உடனடியாக உங்கள் பசி காணாமல் போய்விடும்.

மதுப்பழக்கம் கூடாது

மது அருந்துவது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் நன்கு அறிவோம். குறிப்பாக இது இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை அதிகரிக்க கூடும். ஆனால் அதுமட்டுமின்றி மது அருந்துவது நீங்கள் பசியாக இல்லாவிட்டாலும் உங்கள் மூளையை பசி போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த தூண்டும்.

மனஅழுத்தம்

அலுவலகத்தில் அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அது உங்களிடையே அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும்.அதிக மனஅழுத்தம் ஏற்படும்போது அது கார்டிசோல் என்னும் ஹார்மோனை சுரக்கும். இது நம்மை இனிப்பு, கொழுப்பு போன்ற உணவுகளை உண்ண தூண்டக்கூடிய ஹார்மோனாகும்.

மருத்துவரை அணுகவும்

எந்நேரமும் பசியாக இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்று பசி அதிகம் எடுக்க காரணம் சர்க்கரை நோயாக இருக்கலாம், உங்களின் தூக்கமின்மை கூட இதனை ஏற்படுத்தலாம், நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள், கடினமான டயட், தைராய்டு பிரச்சினை. குறைந்த சர்க்கரை அளவு என இது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

SHARE