அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா?

321

இன்றைய காலத்தில வெள்ளை முடி பிரச்சினை உள்ளவர்கள் அதனை மறைப்பதற்கு ஹேர் டை பயன்படுத்துவார்கள்.

அதுமட்டுமின்றி இன்று பேஷன்(Fashion) என்ற பெயரில் பல பெண்கள் ப்ரவுன், பர்கண்டி, சிகப்பு மற்றும் பல வண்ண நிறங்களில் முடியினை கலரிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் ஹேர் டையில் உள்ள ரசாயனக் கலவை நம்மை ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

ஏனெினல் டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள்.

முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவதால் நம்மை ஆபத்தில் நோக்கி கொண்டு செல்கின்றது எனப்படுகின்றது.

பாதிப்பு என்ன?

நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.

மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு.

எப்படி சரி செய்வது?

விலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது.

அந்தவகையில் தற்போது வீட்டில் தயாரிக்ககூடிய ஹென்னாவை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம்.

இது எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி முடியின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கின்றது.

குறிப்பு

பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும்.

மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்னைகளையும் உண்டு பண்ணும்.

SHARE