மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை குமார தசாநாயக்க வித்தியாலயத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் கௌரவ நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சுமார தசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச சபை முன்னாள் தலைவர் அசோக்க ஹேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவலும் படங்களும் :- பா.திருஞானம்