அடி வாங்கியே அனைவரையும் கவர்ந்தவர்- புது மாற்றத்தை கொண்டு வந்த ஜாக்கி

254

அடி வாங்கியே அனைவரையும் கவர்ந்தவர்- புது மாற்றத்தை கொண்டு வந்த ஜாக்கி - Cineulagam

தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகனுக்கும் தெரிந்த வெளிநாட்டு நடிகர் ஜாக்கி ஜான். இவர் சைனா மொழியை சார்ந்த படத்தில் நடித்தாலும் நமக்கு அவர் ஹாலிவுட் நடிகர் தான்.

அந்த அளவிற்கு அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன் என பெரும் ஜாம்பவான்கள் ஹாலிவுட்டை கலக்கிய நேரத்தில் தன் சொந்த மொழியில் நடித்த படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

ஹீரோ என்றாலே 10 பேரை போட்டு பந்தாடுவது என இருந்து வந்த காலத்தில், வில்லனிடம் அடி வாங்கி அடி வாங்கி ரசிகர்களை சிரிக்க வைத்து, புதிய ட்ரண்டையே உருவாக்கினார் ஜாக்கி.

ஜாக்கி ஜான் பறந்து பறந்து சண்டைப்போட்டாலும், அவர் அடி வாங்கி கீழே விழுந்து அவர் செய்யும் சேட்டைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம். ‘என்னால் நிஜ வாழ்க்கையில் 2 பேரை அடிக்க முடியும், அதற்கு மேல் வந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என கூறி, தன் படத்திலும் பெரும்பாலும் ஜாக்கி இதையே கடைப்பிடிப்பார்.

இதற்கெல்லாம் மேலாக குங்பூ என்பது சண்டைப்போடும் கலை இல்லை, அது ஒரு தற்காப்பு கலை மட்டுமே, எதிரிகளிடமிருந்து தன்னை பாதுக்காக்க மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தன் படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த மகா கலைஞனின் 61வது பிறந்தநாள் இன்று. Happy Birathday Jackie

SHARE