அடுக்குமாடி குடியிருப்பில் 2 ஆண்டுகளாக கிடந்த சடலம்

247

ஜேர்மனி நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் வசித்த ஒருவர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘கடந்த சில மாதங்களாக குடியிருப்பில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரை காணவில்லை என்றும், அவரது உறவினர்கள் கூட வீட்டிற்கு வரவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தகவலை பெற்ற பொலிசார் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, ஒரு அறைக்குள் மூதாட்டியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மூதாட்டியின் வயது 91 ஆக இருக்கலாம் என்றும், கடந்த 2015-ம் ஆண்டிலேயே அவர் இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை சேகரித்த பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி வயது மூப்பு காரணமாக இறந்தாரா அல்லது பின்னணி காரணங்கள் எதுவும் உள்ளதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE