அடுத்தப்படத்தின் இரண்டு பிரபல ஹீரோயின்கள், இவர்கள் தான்

165

தனுஷ்-செல்வராகவன் கூட்டணிக்கு என்றே பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது. அவர்கள் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு எப்போது இணைவார்கள் என அனைவரும் காத்திருந்தனர்.

தற்போது அவர்கள் காத்திருப்பிற்கு பலனாக அடுத்த வருடம் இவர்கள் இணையவுள்ளனர், இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இதில் ஹீரோயினாக அதிதி ராவ் மற்றும் இந்துஜா ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் இருவருமே முதன் முறையாக தனுஷுடன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு இந்தியா திரும்பும் போது நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE