2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால் அது உறுதியான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என அவர் கூறியுள்ளார்.
சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, கோத்தபாய ராஜபக்ச மீது பயம் உள்ளது. அதனால் தான் குற்றம் குற்றம் செய்யாத போதும் அவரை சிறையில் அடைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.