அடுத்த நொடியில் அழிவுவை எதிர்நோக்கும் பூமி

238

இப்போது ஒட்டு மொத்த உலகமும் அச்சத்தில் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் என்ற அதிர்ச்சி மிக்க செய்திகளே.

அச்சுறுத்தும் ஆயுத பரிசோதனைகள், ஒத்திகைகள் ஒரு பக்கம், மிரட்டும் அணு ஆயுதங்கள் மறுபக்கம் என நாளுக்கு நாள் போர் பதற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இவற்றின் நடுவே நம்பமுடியாத ஆனால் நம்பியாக வேண்டிய தீர்க்கதரிசிகளால் வெளியிடப்படும், அல்லது வெளியிடப்பட்ட தீர்க்க தரிசனங்களும் மூன்றாம் உலக யுத்தத்தை அதிகமாகவே மிரட்டிப்பார்க்கின்றது.

இந்த நிலையில் ஒரு சில புத்திஜீவிகள் மூன்றாம் உலக யுத்தம் என்பது ஏற்படாது என்று ஆறுதல் செய்திகளை வெளியிட்டு வந்தாலும் கூட பகிரங்க போர் எச்சரிக்கைகள் அதனை பொய்யாக்கி வருகின்றன.

அதேபோல் இந்த உலகப் போர் ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும், அதன் படியே இப்போது காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றது என்ற செய்திகளும் அன்றாடம் வெளிவருகின்றன.

இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக மற்றுமோர் ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதுவே அழிவு நாள் விதைகள் பெட்டகம் என அழைக்கப்படும் உலக விதைகள் காப்பகம் ஆகும்.

நேர்வே நாட்டின் ஓர் தீவுப்பகுதியான ஸ்வல்பேட் எனும் பகுதியில் இந்த விதைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பமாகி, 2008 ஆம் ஆண்டு இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மூலை முடுக்கு எங்கும் உள்ள பிரதான தானிய வகைகள், தாவரங்களின் விதைகள், வேர்கள் என தாவர மாதிரிகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு வருகின்றது.

முற்றிலும் பனி மூடப்பட்ட பிரதேசத்தில் ஒரே ஒரு கதவு மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மற்றுமோர் விஷேட அமைப்பு எது வெனில் இயற்கையாலும், செயற்கையாலும் இது அழிவடையாது.

முற்றிலுமாக நீரினால் மூழ்கினாலும் கூட உள்ளே இருக்கும் விதைகளுக்கு பாதிப்பு ஏற்படாது, அதேபோல் அணு ஆயுதங்களினால் ஏற்படும் கதிரியற் தாக்கங்களையும் கூட தாக்கு பிடிக்கும் வகையில் இந்த பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மேற்தளத்தில் மட்டும் சுமார் 865000 விதைகளும் ஒட்டு மொத்தமாக 2.5 பில்லியன்கள் தாவர மாதிரிகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த காப்பகம் பூமியின் 13000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விவசாய வரலாறுகளையும் உள்ளடக்கிய தாவர, விதைகளும் காக்கப்பட்டு வரும் உலகின் மர்மமான விதைகள் காப்பகம் என ஆய்வாளர் பிரையன் லேனாஃப் என்பவர் கூறுகின்றார்.

ஓர் பாரிய அழிவு ஏற்படுமாயின், அல்லது முற்றிலும் தாவரங்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டாலும் மீண்டும் பூமியை புதுப்பித்துக் கொள்ள இந்த தாவரங்கள் மிக அவசியமாக கருதப்படுகின்றது.

ஆய்வாளர்களின் தகவல் படி பூமிக்கு அழிவு என்பது இயற்கை வடிவில் இப்போது சாத்தியம் இல்லை அப்படி இருக்கும் போது இவ்வாறான ஓர் தளம் ஏன் அமைக்கப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அதுவும் உலகில் மனித நடமாட்டம் அற்ற, மனிதர்கள் வாழும் சாத்தியமற்ற பனிப்பிரதேசத்தில் வாசல் மட்டும் வெளியே தெரியும் வகையில், தகுந்த பாதுகாப்புடன் இந்த பெட்டகம் (கட்டடம்) அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இப்போது பதற்றமடைந்துள்ள மூன்றாம் உலக யுத்தம், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று எனவே, அதில் ஏற்படும் அழிவுகளில் இருந்து பூமியை புதுப்பித்துக் கொள்வதற்காக திட்டமிட்டே இந்த விதைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக விதைகள் காப்பகங்கள் ஒவ்வோர் நாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் சர்வதேசம் இணைந்து இவ்வாறான தொரு இடத்தினை அமைத்துள்ளது ஆபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பதாலேயே என்றே தெரிவிக்கப்படுகின்றது.

வெளிப்படையில் உள் நாட்டுப் போர்களினால் பாதிக்கப்பட்ட ஓர் நாட்டுக்கு இந்த விதைகள் (தாவர) வங்கியில் இருந்தே விதைகள் வழங்கி வைக்கப்படும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகவே இந்த விதைகள் காப்பகம் அடையாளப்படுத்தப் படுகின்றது.

அண்மையில் மத்தியக் கிழக்கு நாட்டு ஆய்வாளர்கள் தாம் இந்த விதைகள் காப்பகத்திற்கு வழங்கிய விதைகளை மீளப் பெற்றுக் கொண்டு வேறு ஓர் விதை காப்பகத்தில் சேமித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனாலும் நோர்வேயில் உள்ள சர்வதேச விதைகள் காப்பகத்தில் ஓர் தாவர மாதிரியைக் கொண்டு தாவரங்களை உருவாக்கும் தொழில் நுட்பமும் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆக ஒட்டு மொத்த சர்வதேசமும் இப்போது ஓர் அழிவை எதிர் நோக்கி இருப்பதாகவும், பூமியில் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்பதால் அதில் இருந்து பூமியை புதுப்பித்துக் கொள்வதற்காகவே இந்த விதைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இப்போதைய நிலவரப்படி மூன்றாம் உலகப்போர் ஏற்படுமாயின் அணுவின் தாக்கத்தால் தாவரங்களுக்கு கடுமையான பாதிப்பும் நச்சுத் தன்மையும் ஏற்படும்.

அவ்வாறான தருணத்தில் புதுத் தாவரங்கள் தேவை இந்த நோக்கத்திற்காகவே இந்த விதைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் பூமிக்கு ஆபத்து இல்லை, மூன்றாம் உலக யுத்தம் ஏற்படாது என்ற கூற்று உண்மையாயின் இவ்வாறான தொரு இடம் உலகில் ஓர் மூலையில் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

எனவே எந்த நொடியும் அடுத்த உலக யுத்தம் ஏற்படக் கூடும் என்றே எதிர்வு கூறப்படுகின்றது. எனினும் திடீர் திருப்பங்களால் இப்போது போர் ஏற்படாவிட்டாலும்.,

மீண்டும் ஓர் உலக யுத்தம் அல்லது, ஓர் உலக அழிவை சர்வதேசம் எதிர் நோக்கிக் கொண்டே இருக்கின்றது என்பதே இந்த விதைகள் காப்பகம் மறைமுகமாக கூறும் உண்மை என்பதே மேற்குலக ஊடகங்களின் தகவல்.

SHARE