பிரித்தானிய இளவரசி மெர்க்கலிற்கு அடுத்த மாதம் குழந்தை பிறந்து விடும் என ஆன்லைனில் அதிகமானோர் பந்தயம் கட்டியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி கடந்த ஆண்டு மே மாதம் மெர்க்கலை திருமணம் செய்தார். இளவரசி Eugenie திருமணத்திற்கு பின்னர், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த செய்தியினை அரண்மனை நிர்வாகம் வெளியிட்டது.
இளவரசி மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாகவும், வசந்த காலத்தில் குழந்தையை எதிர்ப்பார்க்கலாம் எனவும் கூறியிருந்தனர்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலிற்கு பிறக்கும் குழந்தை அரியணை வரிசையில் ஏழாவது குழந்தையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முன்னணி ஆன்லைன் பந்தய நிறுவனம் ஒன்று, இளவரசி மெர்க்கலிற்கு அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என அதிகமானோர் பந்தயம் கட்டியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கும் எனவும், ஒரு சிலர் காதலர் தினத்தில் இரட்டை குழந்தைகள் பிறக்கும் எனவும் பந்தயம் கட்டியிருப்பதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.