அடுத்த முதல்வர் அஜித்தா? இதற்கு அஜித் தரப்பு என்ன சொல்கிறது

219

625-167-560-350-160-300-053-800-300-160-90-2

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து, அவரது முதல்வர் அரியணையில் அஜித்தான் அமரப் போகிறார் என்ற செய்தி தீயாய் பரவியது.

பல்கேரியாவிலிருந்த அஜித் ஜெயலலிதா மறைந்த செய்தி கேட்டு அவசரமாக இந்தியாவுக்கு வந்தார்.

எனினும் விமானம் தாமதமானதால், புதன்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாலினியுடன் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில் மலையாள தொலைக்காட்சிகள் திடீரென்று ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டன.

அது என்னவென்றால், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசும், அடுத்த முதல்வரும் அஜித் என்பதே. இந்த செய்தி அஜித் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் காட்டுத் தீயைப் போல் பரவ ஆரம்பித்தன.

இது குறித்து அறிந்த அஜித் தரப்பினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தைரியம், பண்பு உள்ளிட்டவை அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும். அவரை தாயைப் போல் நினைத்தவர் அஜித்.

இதனால், அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என கிளம்பி வந்தவரால் முடியாமல் போய்விட்டது. இதனால் மிகுந்த சோகத்தில் உள்ளார்.

மற்றபடி அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருந்தது கிடையாது.

இப்படி இருக்கையில், ஏன் அவருடைய பெயர் அடிபடுகிறது என்பது பெரும் புதிராகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

SHARE