அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை!!! வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை.

308

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை:

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், மதுரை, தேனி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.

மேலும் சென்னையில் நேற்று விடிய விடிய இடி மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலையில் இருந்தும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். தரைக்காற்று பலமாக வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.Tamil-Nadu

SHARE