நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையிலும், மத்திய மலை நாட்டின் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வைகாசி விசாக இரதோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை-வூட்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வைகாசி விசாக இரதோற்சவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ முத்துமாரியம்பாள் வண்ண சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் வலம் வந்து இன்று காலை விஷேட வசந்த மண்டப பூஜையூடன் பக்த அடியார்களுக்கு இறையருளைப் பாலித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10.00 மணிக்கு தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளதுடன் (23) திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு பூங்காவனமும் இடம்பெற உள்ளது.
இதேவேளை, (24) செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறும் வைரவர் பூஜையுடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.