முரளியுடன் இதயம், அஜித்துடன் காதல் கோட்டை, திருடா திருடா போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை ஹீரா. பி.எஸ்.சி சைக்காலஜி படித்துள்ள இவர் 1991ம் ஆண்டு இதயம் படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.
பின் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் சினிமா பயணத்தின் போது அஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக கூட நிறைய செய்திகள் வந்தன.
காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவருக்கு பட வாய்ப்புகள் குறைத்து போக 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றார்.
தற்போது ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுத்து வருகிறார்.