அட்டனில் ஆணின் சடலம் மீட்பு

290

இந்த சடலம் 29.03.2016 அன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பிரதேச ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆற்றில் சடலமொன்று கிடப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சடலம் 28.03.2016 அன்று திடீரென பெய்த கடும் மழையில் பெருக்கெடுத்த ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்திருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

b64b5a5a-0b4f-4f76-84ce-8a8e8c67a2c6

b1103530-cc90-4e95-afc2-d47ff59bb76b

19850c9b-f75b-4219-bbb0-41dea3b3b21c

SHARE