அட்டனில் மக்கள் சந்திப்பின் மூலமாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தலைமையில் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

275

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு, மக்கள் மன்றம் எனும் தொனிப்பொருளில் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் 19.08.2016 (வெள்ளிக்கிழமை) அதாவது இன்றையதினம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தலைமையில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த பெ.சந்திரசேகரன் வழியில் மக்களை நேரடியாகச்சென்று அவர்களின் குறைகளைத் தீர்ப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இவ்மக்கள் மன்றம் மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்படும் என வே.இராதாகிருஸ்னன் அவர்கள் தெரிவித்தார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டதுடன் தோட்டப்புர பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களும் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கு 7 இலட்சம் ரூபாய் பெருமதியான பச்சைப் பலகை 20 அமைச்சரினால் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் கல்வி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத்தேவை, பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு வகையான விடயங்கள் மக்கள் சந்திப்பின் மூலம் கண்டறியப்பட்டதுடன் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தீர்வுகளும் காணப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.லோரண்ஸ், அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed (1)

unnamed (4)

unnamed (3)

unnamed (2)

 

SHARE