அட்டனில் வேன் விபத்து

280

கொழும்பு பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன்-கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 05.05.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார்தெரிவித்தனர்.

எனினும் இதில் பயணித்த பயணிகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்காதபட்சம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE