அட்டன் கண்டி போக்குவரத்து இரண்டாவது நாளாகவும் தடை பாதை புனரமைப்பு பணி தொடர்கிறது

275

அட்டன் கண்டி பிரதான பாதையில்  இரண்டாவது நாளாகவும் போக்குவரத்து தடை

அட்டன் கண்டி பிரதான பாதையில் நாவலபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலதாழமுக்கத்தினால் போக்குவரத்து தடை செய்பப்பட்டிருந்த நிலையில் 18.05.2016 இன்றும் தொடர்ந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதாக நாவலபிட்டி  பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனைக்கும் நாவலபிட்டிக்கும் இடையிலான மீப்பிட்டிய பகுதியில் பாரிய நில வெடிப்புடன் நிலம் தாழிறங்கிய நிலையில் 16.05.2016 மதியம் 12 மணீமுதல் பாதை புனரமைப்பு பணி நிமித்தம் போக்குவரத்து தடைசெய்பட்டது பாதை அபிவிருத்தி அதிகாரசபையினரால் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

பயணிகளின் நலன் கருத்தி குறித்த இடத்திலிருந்து இரு பகுதிகளுக்குமான பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

94723b55-e1f8-4c29-9beb-5bfb668cf9ae ba6dceec-0a5b-48ee-9d70-d94e10405cbb c2660ef6-f5ef-4ea5-80c7-ffde59498b51 fcdc2810-ca1c-453f-9ad1-12d79ccc75ec

SHARE