அட்டன் விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

127
(நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்) 
அட்டன்  மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்த இருவரும் அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் அட்டன் மல்லியப்பூ பகுதியில் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அட்டன் மல்லியப்பூப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி.கேமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மட்டக்குளியப் பகுதியைச் சேர்ந்த 41 வயது கந்தசாமி அமிலசேகர் (முச்சக்கர வண்டியின் சாரதி) உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை டயகம பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து மோகன் என்பவர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் இருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார்.
குறித்த இவர்கள் 16.09.2018.ஞாயிற்றுகிழமை மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு வந்து வீடு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இருவரதும் பிரதே பரிசோதனை 17.09.2018 திங்கள் கிழமை நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்று குறித்த இரண்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE