அட்லீ தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் அடுத்து யாருடன் கைக்கோர்ப்பார் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நேற்று நம் தளத்திலேயே அட்லீ அடுத்து இயக்கவுள்ளது ஒரு தெலுங்குப்படம் தான் என்று தெரிவித்து இருந்தோம்.
இதை தொடர்ந்து அந்த தெலுங்கு நடிகர் யார் என்பது தான் பலரின் கேள்வியும், பிரபாஸுடன் தான் அட்லீ இணைவார் என்று முன்பு கூறப்பட்டது.
ஆனால், பிரபாஸ் சஹோ முடிந்து அடுத்து ஒரு காதல் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார். இதனால், கண்டிப்பாக பிரபாஸ் இருக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது.
இவரை தவிர்த்து அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இருவரில் ஒருவர் தான் அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ என கூறப்படுகின்றது.