அட்லீ-விஜய் இருவரும் இணைந்து தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டனர். கடந்த வருடம் வெளியான மெர்சல் படம் இப்போதும் பல விருது விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் இணைவது நமக்கு தெரிந்த விஷயம் தான். AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகி குறித்து தற்போது ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகியான கைரா அத்வானி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் இதற்கு முன் எம்.எஸ். தோனி படத்திலும் மகேஷ் பாபு நடித்த Bharat Ane Nenu படத்திலும் நடித்துள்ளார்.