அணியில் மீண்டும் கோலி

152

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது.

இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை (26) தொடங்குகிறது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார்.

அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.கடந்த 15 ஆம் திகதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற கோலி, பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து 19 ஆம் திகதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE