அண்ணியை கொடுமைபடுத்திய நடிகை ரம்பா: ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

222

அண்ணியை கொடுமைபடுத்திய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகை ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகை ரம்பாவின் அண்ணன் வாசுவின் மனைவி பல்லவி. வாசு, ரம்பா உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக பல்லவி கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரம்பா உள்பட 5 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யுமாறு பஞ்சரா ஹில்ஸ் பொலிசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ரம்பா, வாசு உள்பட 5 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அப்பொழுது ரம்பா கனடாவில் வசித்ததால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில் ரம்பா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தது கடந்த 10ம் திகதி போலீசாருக்கு தெரிய வந்தது.

உடனே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரம்பாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். பத்மாலயா ஸ்டுடியோஸில் வைத்து ரம்பாவிடம் சம்மனை அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE