அதர்வாவுடன் ஜோடி சேரும் அனுபமா பரமேஸ்வரன்

186
அதர்வா

அதர்வா
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”100” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது.
அனுபமா பரமேஸ்வரன்
பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ந் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்க  உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்குமுன் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ’பூமராங்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE