அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் என்னென்ன உடல்நல கோளாறுகள் ஏற்படும்?

369

மனிதனை செயற்பட்ட இந்த உலகம் முற்றும் முழுதாக இயந்தியங்களை நம்பி செயற்பட ஆரம்பித்து விட்டது.

இன்று இந்த தொழில்நுட்ப சாதனங்களுக்கு சிறுவர்களையும் அடிமையாக்கி விட்டது.

இன்றைய தொழிலுட்ப உலகில் கணினி என்பதற்கு அனைவருக்குமே அத்தியவசியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

அந்தவகையில் கணினியை தினமும் உபயோகப்படுத்துவதனால் நமது உடலில் ஏற்படும் உடல்நல கோளாறு என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கணினியை தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு, தசை வேதனை மற்றும் தசை சோர்வு, தோள்பட்டை வலி, தண்டுவட வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை ஏற்படுகின்றது.
  • கைகளை ஒரே நிலையில் வைத்து வேலை செய்வதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, தோள்பட்டை, கழுத்து, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை முதல் விரல்கள் வரை இடைப்பட்டு வலிகள் ஏற்படுவது, தசை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
  • கண் கூசுதல், எரிச்சல், பார்வையில் குறைபாடு, கண் வறட்சி, இமைகள் துடித்துக் கொண்டே இருப்பது போன்ற கோளாறுகள் கணினியை ஓயாது பயன்படுத்துவதனால் ஏற்படுகிறது.
  • அதிகப்படியான தோள்பட்டை மற்றும் கழுத்து வலியின் காரணமாக தான் தலை வலி ஏற்படுகிறது. மற்றும் ஓயாத வேலை, மன அழுத்தமும் சேர்ந்து தலை வலியை அதிகரிக்க செய்கிறது.
  • உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதனால் உடல் பருமன் அதிகரிக்கின்றது.
  • தினமும் கணினியில் பணிபுரிபவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக தான் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரிப்பதற்கு காரணமே இந்த மன அழுத்தம் தான்.

SHARE