அதிகரிக்கும் உணவுப்பொருள் கடத்தல்: திணறும் சுவிஸ் நிர்வாகம்

211

சுவிட்சர்லாந்தில் உணவுப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு மத்திய சுங்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுவிஸ் நாட்டில் அதிகரிக்கும் உணவுப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் பல்வேறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டில் இதுவரை 19 டன் உணவுப்பொருட்களை கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக சுங்க இலாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 28 டன் என இருந்தது.

இதுவரை கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் ஒரு சாதனையாக கருதப்பட்டாலும், கடத்தல் ஆசாமிகள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டே வருகின்றனர்.

பல நூறு கிலோ மீற்றர் பரப்பிலான எல்லைப்பகுதியே இதுபோன்ற கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது. மட்டுமின்றி சுவிஸ் நாட்டில் விலைவாசி மிக குறைவாக இருப்பதும், இங்கிருந்து உணவுப்பொருட்களை கடத்திச் சென்று பிரான்சில் அதிக விலைக்கு விற்று காசு பார்க்கும் கும்பலே இதில் ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை தடுக்க 50க்கும் குறவான அதிகாரிகளையே அரசு நியமித்துள்ளது. இதனால் போதிய நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதுபோன்ற கடத்தல் நடவடிக்கையால் சுவிஸ் நாட்டிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, வேறுபல சுகாதார சிக்கலும் இருப்பதாக கூறப்படுகிறது.

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)

SHARE