அதிகரிக்கும் கோடை வெப்பம்: உருகி வழியும் தார் சாலைகள்

317

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கவே தார் சாலைகள் உருகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில்கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே சாலைகள் பலவும் வெப்பத்தின் தாக்கத்தால் உருகி பொதுமக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் அமைந்துள்ள சில்வாச சாலையில் தார் உருகி வழிந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்பட்டுள்ளனர்.

சில்வாச பகுதியில் மட்டுமின்றி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலும் இதுபோன்று அதிக வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகி வழிந்துள்ளது. இப்பகுதி சில்வசா பகுதிக்கு 50 கிலோ மீற்றர் வட திசையில் அமைந்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது முதன் முறையல்ல. கடந்த ஆண்டு கத்தரி வெயில் உச்சத்தில் இருந்த மே மாதத்தில் புது டெல்லியில் உள்ள சில பகுதிகளில் தார் சாலை உருகி வழிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

SHARE