அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் ஆபத்தில் பலாங்கொடை பாடசாலை மாணவர்கள்

272

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை மற்றும் காற்றினால் இலங்கையின் பெரும் பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

இந்த அனர்தங்களினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சப்ரகமுவ மாகாணமும் ஒன்றாகும்.

இந்த மாகாணத்தின் பலாங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள அல் மினாரா வித்தியாலயத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் இணைப்பு கம்பியானது காற்றினால் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் இது தொடர்பான கடந்த ஐந்து தினங்களாக இலங்கை மின்சார சபையின் பலாங்கொடை கிளைக்கு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டுவந்த போதிலும் இன்று வரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இம் மின் இணைப்பு கம்பியானது அறுந்து விழும் நிலையில் உள்ளமையினால் பாடசாலை மாணவர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் குறித்த அச்சுறுத்தலை எதிர்நோக்கலாம்.

இந் நிலையில் நீண்டா கால விண்ணப்பத்திற்கு பின்னரும் அதிகரிகளின் அசமந்த போக்கு தொடர்பில் பிரதேச மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

 

SHARE