அதிகாலையில் கல் உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க!

501

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது.

அத்தகைய உப்பை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக்கவும், தீய சக்திகளை விரட்டவும் செய்து செல்வத்தை அதிகரிக்கலாம்.

மேலும் உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
  • தினமும் அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து மடியில் ஒரு வெள்ளை பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள் அல்லது வாய்விட்டு வெளிப்படையாக 10 நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும்.
  • அதன்பின்னர் கையில் வைத்திருக்கும் உப்பை மடியில் உள்ள வெள்ளை பேப்பரில் போட்டு நன்றாக மடித்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும்.
  • இப்படி தினமும் செய்து வந்தால், நேர்மறை சக்திகள் அதிகரித்து, நம்மிடம் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் மாயமாய் விலகும் என்பது நம் முன்னோர்களின் கூற்று ஆகும்.
  • மேலும் லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள்.
  • மேல் கூறப்பட்டுள்ள முறைகளை சரியாக பின்பற்றி வந்தால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேற்றப்படுவதுடன், வீட்டின் ஏழ்மை நிலை நீங்கி, நேர்மறை சக்திகள் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.

SHARE