அதிகாலையில் நடந்த விபரீதம்! ஒருவர் பலி

476

திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை பகுதியில், மரக்கறி தோட்டம் வைத்துள்ள இவர், இரவில் காவல் காத்துவிட்டு காலையில் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில், 54 வயதுடைய, மில்டன் அப்புஹாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவருடைய சடலம் புல்மோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE