அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்த சோகம்.

373

அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்த சோகம். வடமேல் மாகாண நபருக்கு கிடைத்த அனுபவம்.

தெரியாத தொழிலொன்றை செய்ய முயற்சித்து பாரிய நட்டத்தை சம்பாதித்துக்கொண்ட லொறி உரிமையாளர் ஒருவர் தொடர்பான தகவலொன்று அண்மையில் வடமேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த லொறி உரிமையாளர் முன்னர் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ஒருவர். தனது ஓய்வுபெறும் வயது நிறைவடைவதற்கு முன்னதாகவே ஓய்வு பெற்று தனது பணிக்கொடையைப் பெற்றுக்கொண்டார்.

ஓய்வு பெற்றதன் பின்னர் வீட்டில் இருந்தபோது தனக்குக் கிடைத்துள்ள பணத்தினை பயன்படுத்தி ஏதாவது முதலீடொன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற யோசனை தோன்றியது.

பலர் பலவிதமான யோசனைகளைக் கூறியபோதும் தனது அயலவர்கள் முன்னேற்றமடைந்தமைக்கு காரணமான தொழிலையே தானும் தெரிவு செய்யவேண்டுமென தீர்மானித்து பலத்த எதிர்பார்ப்புடன் லொறியொன்றைக் கொள்வனவு செய்தார்.

இந்தத் தொழிலின் தன்மையின்படி அனுபவம் வாய்ந்த உதவியாளர் ஒருவர் அவசியம் என்பதையும் அவ்வுதவியாளருக்கு கணிசமான தொகையினை சம்பளமாக வழங்க வேண்டும் எனவும் அறிந்த லொறி உரிமையாளர் வீட்டிலிருந்த தனது மகனொருவரை உதவியாளாராக செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

முதலாவது நாள் வளவினுள் இருந்து வீதிக்கு லொறியை பின்புறமாக செலுத்திச் சென்றபோது வீட்டுச் சுவரில் மோதி சுவரை உடைத்து விட்டது. லொறி சாரதியின் மகன் லொறியை பின்புறமாக செலுத்துவதற்கு சமிஞ்கை காட்டிக்கொண்டிருந்தார்.

எனினும் நன்பரொருவருடன் தொலைபேசியில் கதைத்தவாறே காட்டப்பட்ட தவறான சமிஞ்கையே விபத்துக்கு காரணமாகியது.

தற்போது சேதமடைந்த லொறியை திருத்துவது தொடர்பிலும், வீட்டுச் சுவரினை மோதி உடைத்தமைக்காக வீட்டு உரிமையாளருக்கு நட்டஈடு கொடுப்பது தொடர்பாகவும் தற்போது யோசித்து வருகிறாராம்.

SHARE