அதிக காலம் இணைந்து வாழ்ந்து ஒட்டிப்பிறந்த அமெரிக்கர்கள் சாதனை

625
உலகமெங்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில், சாங், இங்க் பங்கர் சகோதரர்கள் 1811-ம் ஆண்டு மே மாதம் 11-ந் திகதி பிறந்தார்கள். அதிகபட்சமாக இவர்கள் 62 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து சாதனை படைத்தனர்.

1874-ம் ஆண்டு ஜனவரி 17-ந் திகதி இங்க் பங்கர் உறங்கிக்கொண்டிருந்தபோது, சாங் நுரையீரல் நோயால் இறந்து விட்டார். சகோதரர் மறைவு, இங்க் பங்கரை உலுக்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

அவர் சகோதரர் இறந்த அதிர்ச்சியில் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர். இப்போது அமெரிக்காவில் ஓயோ மாகாணத்தில் டோனீ, ரோனீ என்ற ஒட்டிப்பிறந்த சகோதரர்கள், கூடுதல் காலம் இணைந்து வாழ்ந்து சாங்-இங்க் பங்கர் சகோதரர்களை பின்னுக்கு தள்ளி விட்டார்கள்.

டோனீ, ரோனீ சகோதரர்கள் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் திகதி பிறந்தவர்கள். இப்போது இவர்கள் 62 வருடம், 8 மாதங்கள், 8 நாட்கள் வயதான நிலையில், உலகிலேயே அதிக காலம் வாழ்ந்து வருகிற ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்ற பெயரை பெற்றுள்ளனர்.

இதை நேற்று அவர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.இவர்களது ஆசை, உலகிலேயே அதிக காலம் வாழ்ந்து மறைந்த இத்தாலியின் ஜியாக்கோமா, ஜியாபானீ சகோதரர்களின் சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான்.

SHARE